சங்கரன்கோவில் அருகே பட்டப்பகலில் துணிகரம்: விவசாயி வீட்டில் ரூ.12 லட்சம் நகை-பணம் கொள்ளை
சங்கரன்கோவில் அருகே பட்டப்பகலில் விவசாயி வீட்டில் ரூ.12 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவேங்கடம்,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தை அடுத்த சங்குபட்டி மேல தெருவைச் சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 70), விவசாயி. இவருைடய மனைவி ஆண்டாள் (65). இவர்களுடைய மகன் சரவணன். திருமணமான இவர் சிங்கப்பூரில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இதனால் நாராயணசாமி தன்னுடைய மனைவியுடன் சொந்த ஊரில் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் காலையில் நாராயணசாமி மனைவியுடன் அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்கு சென்றார்.
ரூ.12 லட்சம் நகை-பணம் கொள்ளை
அப்போது நாராயணசாமியின் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையடிக்க திட்டமிட்டனர். அதன்படி, நாராயணசாமியின் வீட்டின் பின்பக்க காம்பவுண்டு சுவரை தாண்டி குதித்து அவர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டின் பின்புற கதவை உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர். தொடர்ந்து வீட்டில் இருந்த பீரோவையும் உடைத்து திறந்து, அதில் இருந்த 28½ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.12 லட்சம் இருக்கும்.
போலீசார் விசாரணை
மாலையில் நாராயணசாமி மனைவியுடன் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததையும், நகைகள்-பணம் கொள்ளை போனதையும் அறிந்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து திருவேங்கடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோலையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த வீட்டில் பதிவான தடயங்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர்.
தனிப்படை அமைப்பு
போலீசாரின் மோப்ப நாய் ரிக்கி வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு, அப்பகுதி வழியாக கோவில்பட்டி மெயின் ரோடு வரையிலும் ஓடிச் சென்றது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த கொள்ளை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உத்தரவின்பேரில், கொள்ளையர்களை பிடிப்பதற்காக போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் சங்குபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து, கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திருவேங்கடம் அருகே பட்டப்பகலில் விவசாயியின் வீடு புகுந்து ரூ.12 லட்சம் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story