தைப்பூச திருவிழாவையொட்டி பழனிக்கு 350 சிறப்பு பஸ்கள்; அதிகாரி தகவல்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 31-ந்தேதி வரை நடக்கிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூச தேரோட்டம் வருகிற 28-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி திண்டுக்கல், மதுரை, திருச்சி, காரைக்குடி, நத்தம், புதுக்கோட்டை, தேனி, கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து பழனிக்கு பக்தர்கள் வருகை தருவார்கள். இவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திண்டுக்கல் மண்டலம் சார்பில் வருகிற 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை மேற்குறிப்பிட்ட இடங்களில் இருந்து பழனிக்கும், பழனியில் இருந்து மேற்குறிப்பிட்ட இடங்களுக்கும் 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த தகவலை, மதுரை அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் முருகேசன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story