மாங்காட்டில் திருமண மண்டபத்தில் நகை திருட்டு வாலிபர் கைது


மாங்காட்டில் திருமண மண்டபத்தில் நகை திருட்டு வாலிபர் கைது
x
தினத்தந்தி 29 Jan 2021 9:27 AM IST (Updated: 29 Jan 2021 9:27 AM IST)
t-max-icont-min-icon

மாங்காட்டில் திருமண மண்டபத்தில் நகை திருடியது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பூந்தமல்லி, 

பம்மலை சேர்ந்தவர் விஜயகுமார் (61), இவர் தனது உறவினர் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக மாங்காடு, பரணிபுத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தின் அறையில் பைகளை வைத்து பூட்டிவிட்டு கீழே சென்று திருமண வேலைகளை பார்த்து கொண்டிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அறையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கு இருந்த 7½ பவுன் நகைகள், 2 செல்போன்கள் திருட்டு போயிருப்பது தெரிந்தது. இது குறித்து மாங்காடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் மாங்காடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது சந்தேகத்திற்கிடமாக ஒரு நபர் நின்று கொண்டிருந்தார்.

வாலிபர் கைது

அந்த நபரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக பதில் கூறினார். மேலும் விசாரணை செய்தபோது திருமண மண்டபத்தில் நகை திருடியதை ஒப்புக்கொண்டார். விசாரணையில் அவர் பொழிச்சலூரை சேர்ந்த பன்னீர்தாஸ் (என்ற) பன்னீர்செல்வம் (வயது23), என்பது தெரிய வந்தது. அவர் பாக்கெட்டில் வைத்திருந்த 7½ பவுன் நகை மற்றும் 2 செல்போன்களை போலீசார் கைப்பற்றினர்.

கொள்ளை சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் பன்னீர்தாஸ் கைது செய்யப்பட்டார்.

Next Story