மீனவர்கள் மோதல்: 2 பேருக்கு வெட்டு - சின்னமுட்டத்தில் பதற்றம்


மீனவர்கள் மோதல்: 2 பேருக்கு வெட்டு - சின்னமுட்டத்தில் பதற்றம்
x
தினத்தந்தி 4 Feb 2021 1:36 AM IST (Updated: 4 Feb 2021 1:36 AM IST)
t-max-icont-min-icon

சின்னமுட்டத்தில் மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

கன்னியாகுமரி, 

கன்னியாகுமரி அருகே சின்னமுட்டத்தில் மீனவர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். இந்த கிராமத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் இடையே கோவில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் அந்த முன்விரோதம் காரணமாக நேற்று மாலை மீனவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மீனவர்கள் இருதரப்பினராக பிரிந்து கம்பு, அரிவாள் போன்ற ஆயுதங்களால் மோதிக்கொண்டனர்.

இதில் 2 வாலிபர்களுக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது.  படுகாயமடைந்த 2 பேரும் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த திடீர் மோதலால் அங்கு பதற்றம் நிலவுகிறது. தொடர்ந்து அங்கு மோதல் ஏற்படாத வகையில் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

Next Story