நெல்லை மேலப்பாளையத்தில் அனைத்து கட்சியினர், முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லை மேலப்பாளையத்தில் அனைத்து கட்சியினர், முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை,
நெல்லை மேலப்பாளையம் சந்தை முக்கில் அனைத்து கட்சி மற்றும் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நபிகள் நாயகத்தை அவதூறாக பேசிய பா.ஜனதா பிரமுகர் கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் முகைதீன் அப்துல்காதர் தலைமை தாங்கினார். அப்துல் காதர், உஸ்மான், அக்பர் அலி, குதுபின் நஜீப், அப்துல் முத்தலிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் சாகுல் அமீது உஸ்மானி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
த.மு.மு.க. தலைமை கழக பேச்சாளர் அப்துல் காதர் மன்பஈ, ம.ம.க. மாவட்ட தலைவர் கே.எஸ்.ரசூல் மைதீன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட தலைவர் கனி, மஜ்லீசிஸ் உலமா தலைவர் முகமது இலியாஸ் உஸ்மானி, தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் மூர்த்தி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் முகமது அலி, குர்ஆன் சுன்னா கூட்டமைப்பு ரிபாய் ரசாதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் முகமது கடாபி, அ.ம.மு.க. ஹைதர்அலி, தி.மு.க. மேலப்பாளையம் மேற்கு பகுதி செயலாளர் துபை.சாகுல் அமீது மற்றும் பல்வேறு அமைப்பினர், ஜமாத் நிர்வாகிகள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story