ஓசூர் அருகே நெடுஞ்சாலையையொட்டி முகாமிட்டுள்ள யானை


ஓசூர் அருகே நெடுஞ்சாலையையொட்டி முகாமிட்டுள்ள யானை
x
தினத்தந்தி 5 Feb 2021 12:00 AM IST (Updated: 5 Feb 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே நெடுஞ்சாலையையொட்டி யானை முகாமிட்டுள்ளது

ஓசூர், 

ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இதில் 2 யானைகள் சானமாவு வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களுக்குள் சென்று விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. 

இந்த நிலையில் ஓசூர் - ராயக்கோட்டை நெடுஞ்சாலை ஒரத்தில் ஒற்றை யானை அடிக்கடி வந்து நிற்கிறது. இதனால் வாகன ஒட்டிகள் அச்சமடைந்துள்ளனர். கிராமங்களை ஒட்டி முகாமிட்டுள்ள யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story