கனிமொழி எம்.பி. மீதான வழக்கு விசாரணை: அடுத்த மாதம் 11-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசியதாக கனிமொழி எம்.பி. மீதான வழக்கு விசாரணை அடுத்த மாதம் 11-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
விழுப்புரம்,
தமிழகம் முழுவதும் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி அ.தி.மு.க. ஆட்சியை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திண்டிவனத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டார். இவர் தமிழக அரசையும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் பற்றி அவதூறாக பேசியதாக கூறி மாவட்ட அரசு வக்கீல் சீனிவாசன், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கனிமொழி எம்.பி. ஆஜராகவில்லை. அவர் சார்பில் தி.மு.க. வக்கீல் ஏழுமலை ஆஜராகி, இவ்வழக்கில் கனிமொழி எம்.பி. ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதாகவும், அதற்கான உத்தரவு நகலை சமர்ப்பித்து மனுதாக்கல் செய்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன், இவ்வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (மார்ச்) 11-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story