கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட போலீசார்
போலீசாா் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனா்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக முன் களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் தலைமை மருத்துவ அலுவலர் உஷா, கொரோனா தடுப்பு விழிப்புணர்வு குறித்து பொதுமக்களிடத்தில் பேசினார். இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ், ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் மற்றும் ஏட்டுகள் ஆகியோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். முன்னதாக சுகாதாரத்துறை பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், தற்போது மற்ற துறையை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு என படிப்படியாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story