தக்கலை ஞானமாமேதை பீர்முகமது ஒலியுல்லா ஆண்டு விழா: குமரியில் 26-ந் தேதி உள்ளூர் விடுமுறை

தக்கலை ஞானமாமேதை பீர்முகமது ஒலியுல்லா ஆண்டு விழா: குமரியில் 26-ந் தேதி உள்ளூர் விடுமுறை
x
தினத்தந்தி 13 Feb 2021 11:32 PM IST (Updated: 13 Feb 2021 11:32 PM IST)
t-max-icont-min-icon

தக்கலை ஞானமாமேதை பீர்முகமது ஒலியுல்லா ஆண்டு விழாவையொட்டி குமரியில் 26-ந் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில், 
தக்கலை ஞானமாமேதை பீர்முகமது ஒலியுல்லா ஆண்டு விழாவையொட்டி குமரியில் 26-ந் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 
உள்ளூர் விடுமுறை
தக்கலை ஞானமாமேதை ஷேக் பீர்முகமது சாகிப் ஒலியுல்லா ஆண்டு விழா வருகிற 26-ந் தேதி (ெவள்ளிக்கிழமை) நடக்கிறது.அன்றைய தினம் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.
மார்ச் 13-ந் தேதி
அன்றைய தினம் மாவட்டத்தில் தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அவசர பணிகளை கவனிக்க தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும். இந்த விடுமுறைக்கு ஈடாக அடுத்த மாதம் (மார்ச்) 13-ந் தேதி வேலை நாளாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொடியேற்றம்
இந்தநிலையில் தக்கலை ஞானமாமேதை பீர்முகமது ஒலியுல்லா ஆண்டு பெருவிழா கொடியேற்றம் நேற்று (13-ந் தேதி) இரவு நடந்தது.  இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story