மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது
மாங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகளுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கடைகளுக்கு பொருட்கள் வாங்குபவர்கள் நிறுத்தி விட்டு செல்லும் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருடப்பட்டு வந்தது.
பூந்தமல்லி,
மாங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகளுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கடைகளுக்கு பொருட்கள் வாங்குபவர்கள் நிறுத்தி விட்டு செல்லும் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருடப்பட்டு வந்தது. இதையடுத்து மாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு தலைமையிலான போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தனிப்படைகள் அமைத்து மர்மநபர்களை தேடி வந்தனர். மாங்காட்டில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக வந்த 3 பேரை மடக்கி சோதனை செய்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்கள். இதையடுத்து அவர்களை போலீசார் அழைத்துச் சென்று விசாரித்தபோது பரணிபுத்தூரை சேர்ந்த ஸ்டீபன் (19), சஞ்சய்குமார் (19), மற்றும் 17 வயதுடைய சிறுவன் என்பது தெரியவந்தது. 3 பேரும் சேர்ந்து இரவு நேரங்களில் வீட்:டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்களை திருடிச் சென்று அதனை விற்று அதில் வரும் பணத்தில் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுவன் உள்பட 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றினர்.
Related Tags :
Next Story