மாவட்ட செய்திகள்

பூம்புகார் அருகே தகராறு: கீழே தள்ளிவிட்டு மீனவர் கொலை; 2 பேர் கைது + "||" + Dispute near Poompuhar: Fisherman killed after being pushed down; 2 people arrested

பூம்புகார் அருகே தகராறு: கீழே தள்ளிவிட்டு மீனவர் கொலை; 2 பேர் கைது

பூம்புகார் அருகே தகராறு: கீழே தள்ளிவிட்டு மீனவர் கொலை; 2 பேர் கைது
பூம்புகார் அருகே ஏற்பட்ட தகராறில் கீழே தள்ளிவிட்டு மீனவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்காடு, 

பூம்புகார் அருகே வானகிரி மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் தூண்டிக்காரன் (வயது 56). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரும், அதே கிராமத்தை சேர்ந்த ராஜு (60) என்பவரும் நேற்று முன்தினம் மாலை சமுதாயக்கூடம் அருகே பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை பார்த்துக்கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ் (35) என்பவர், என்னுடைய சித்தப்பாவிடம் ஏன் சண்டை போடுகிறாய் என தூண்டிகாரனை தட்டி கேட்டுள்ளார். இதனால் தூண்டிக்காரனுக்கும், பாக்கியராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

மீனவர் கொலை - 2 பேர் கைது

இதில் ஆத்திரமடைந்த பாக்கியராஜ், தூண்டிக்காரனை கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில் தூண்டிக்காரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தூண்டிக்காரனை மீட்டு சிகிச்சைக்காக பூம்புகார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தூண்டிக்காரன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னை அபிராமி மற்றும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ராஜு மற்றும் பாக்யராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் விமான நிலையம் அருகே துப்பாக்கிச்சூடு; 8 பேர் சாவு; கொலையாளி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தின் தலைநகர் இண்டியானாபோலிஸ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் பெட்எக்ஸ் என்கிற பன்னாட்டு ‘லாஜிஸ்டிக்ஸ்’ நிறுவனம் உள்ளது.
2. செம்பனார்கோவில் அருகே, நள்ளிரவில் வீட்டின் தகவை தட்டிய வாலிபரை அரிவாளால் வெட்டிய சிறுவன் கைது
செம்பனார்கோவில் அருகே, நள்ளிரவில் வீட்டின் தகவை தட்டிய வாலிபரை அரிவாளால் வெட்டிய சிறுவன் கைது.
3. பணம் தர மறுத்த தாய் கழுத்தை அறுத்துக்கொலை; மகன் கைது
பெரம்பலூரில் பணம் தர மறுத்த தாயை கழுத்தை அறுத்துக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
4. அமெரிக்காவில் கருப்பின வாலிபரை சுட்டுக்கொன்ற பெண் போலீஸ் அதிகாரி ராஜினாமா
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம் புரூக்ளின் சென்டர் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் டான்ட் ரைட் (வயது 20) என்ற கருப்பின வாலிபரை போலீசார் கைது செய்ய முற்பட்டனர். அப்போது அவர் போலீசாரின் பிடியில் இருந்து நழுவி காரில் தப்பிச் செல்ல முயன்ற போது, பெண் போலீஸ் அதிகாரியான கிம் பாட்டர் அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
5. போலீஸ்காரரை தாக்கிய போதை ஆசாமி கைது
சென்னையை அடுத்த கானத்தூர் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீஸ்காரராக பணியாற்றுபவர் சதீஷ்குமார்.