மாவட்ட செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.72 லட்சம் தங்கம் பறிமுதல் ரூ.7½ லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது + "||" + Rs 72 lakh gold seized at Chennai airport and Rs 70 lakh foreign currency seized

சென்னை விமான நிலையத்தில் ரூ.72 லட்சம் தங்கம் பறிமுதல் ரூ.7½ லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது

சென்னை விமான நிலையத்தில் ரூ.72 லட்சம் தங்கம் பறிமுதல் ரூ.7½ லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது
சென்னை விமான நிலையத்தில் ரூ.72 லட்சம் மதிப்புள்ள 1½ கிலோ தங்கம் மற்றும் ரூ.7½ லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது ஒரு பயணி கழிவறைக்கு சென்றுவிட்டு நீண்டநேரமாக வெளியே வராததை அதிகாரிகள் கண்டனர். உடனே கழிவறைக்குள் சென்று பார்த்த போது, அங்கு அவர் மிகவும் பதற்றத்துடன் இருந்தார்.

1½ கிலோ தங்கம்

அவரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தபோது, அவர் வேலூரை சேர்ந்த அஜ்மல்கான் (வயது 26) என்பதும், துபாயில் இருந்து தங்க கட்டிகளை கடத்தி வந்ததாகவும், அதை கழிவறையில் மறைத்து வைத்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள், கழிவறையில் மறைத்து வைத்திருந்த பார்சலை பிரித்து பார்த்தனர். அதில் ரூ.72 லட்சம் மதிப்புள்ள 1½ கிலோ எடைகொண்ட 2 தங்கக்கட்டிகள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

வெளிநாட்டு பணம்

அதேபோல் சென்னையில் இருந்து துபாய் சென்ற விமானத்தில் பயணம் செய்ய வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த ரகுமான் அமீது (25) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர். பின்னர் அவரது உடைமைகளை சோதனை செய்தபோது கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள் மற்றும் சவுதி ரியால் ஆகியவற்றை மறைத்து வைத்து கடத்திச்செல்ல முயன்றதை கண்டனர்.

அவரிடம் இருந்து ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 2 பேரிடம் இருந்து ரூ.72 லட்சம் மதிப்புள்ள 1½ கிலோ தங்கத்தையும், ரூ.7½ லட்சம் வெளிநாட்டு பணத்தையும் பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 உயர்வு
இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.4,428-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
2. வெங்கலில் குடோனில் பதுக்கிய 18 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் 6 பேர் கைது
வெங்கலில் லாரிகளில் கடத்தி வந்து விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்த 18 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை சென்னை மத்திய புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்தனர்.
3. மராட்டியத்தில் ரூ.12.5 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்
மராட்டியத்தில் ரூ.12.5 கோடி மதிப்பிலான மெபிடிரோன் என்ற போதை பொருளை கடத்திய நபரை போலீசார் கைது செய்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
4. தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு
இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.4,468-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
5. தர்பூசணி பழங்களுக்கு அடியில் மறைத்து லோடு வேனில் கடத்திய 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்
கும்மிடிப்பூண்டி அருகே லோடு வேனில் தர்பூசணி பழங்களுக்கு கீழ் மறைத்து வைத்து கடத்தப்பட்ட 1 டன் எடை கொண்ட 26 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.