3-வது ரெயில்பாதை பணிக்காக கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது.
செங்கல்பட்டு,
தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது ரெயில் பாதை அமைக்கும் பணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 19-ந்தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது. எனவே சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு-காஞ்சீபுரம்-அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
பராமரிப்பு பணி நடைபெறும் மேற்கண்ட நாட்களில் மின்சார ரெயில் சேவை நேரம் மாற்றப்பட்டு, பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் புதிய கால அட்டவணை உருவாக்கப்பட்டு உள்ளது. அதன்படி கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 3.50 மணி முதல் இரவு 11.59 மணி வரையிலும், தாம்பரத்தில் இருந்து 3.55 மணி முதல் இரவு 11.59 மணி வரையிலும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் 80 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படும். இந்த புதிய திருத்தப்பட்ட புறநகர் சிறப்பு ரெயில்களுக்கான கால அட்டவணை நாளை முதல் 19-ந்தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story