காஞ்சீபுரம் அருகே 55 பட்டு சேலைகள் பறிமுதல்


காஞ்சீபுரம் அருகே 55 பட்டு சேலைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 17 March 2021 10:40 AM IST (Updated: 17 March 2021 10:40 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் பறக்கும் படையினர் ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

காஞ்சீபுரம்,

தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் பறக்கும் படையினர் ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் காஞ்சீபுரத்தை அடுத்த செவிலிமேடு ஜங்சனில் திருவண்ணாமலை மாவட்டம் அசனமாபேட்டை பகுதிகளில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த 2 கார்களை, செவிலிமேடு ஜங்சனில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

அப்போது ஒரு காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் 14 பட்டு சேலைகள், மற்றொரு வாகனத்தில் ரூ.4 லட்சத்து 42 ஆயிரத்து 800 மதிப்பீட்டில் 41 பட்டு சேலைகள் என மொத்தம் ரூ.5 லட்சத்து 82 ஆயிரத்து 800 மதிப்பிலான 55 பட்டு சேலைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருவாய் ஆர்.டி.ஓ. ராஜலட்சுமி தலைமையில் அலுவலகத்தில் கணக்கீடு செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

 


Next Story