துறையூர் சட்டமன்ற தொகுதியில் கிராமம், கிராமமாக அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராகாந்தி தீவிர பிரசாரம்


துறையூர் சட்டமன்ற தொகுதியில் கிராமம், கிராமமாக அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராகாந்தி தீவிர பிரசாரம்
x
தினத்தந்தி 18 March 2021 8:32 AM IST (Updated: 18 March 2021 8:32 AM IST)
t-max-icont-min-icon

துறையூர் சட்டமன்ற தொகுதியில் கிராமம், கிராமமாக அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராகாந்தி தீவிர பிரசாரம் செல்லும் இடம் எல்லாம் மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு.

துறையூர்,

துறையூர் அ.தி.மு.க. சட்டமன்ற வேட்பாளர் இந்திரா காந்தி துறையூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் செல்லும் இடமெல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாகத்துடன் வரவேற்றனர்.

பெருமாள் மலை அடிவாரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவரிடம், நீங்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, ஆகியவற்றை மேம்படுத்தி கொடுத்தீர்கள். அதற்காக நாங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மீண்டும் நீங்கள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு எங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என மக்கள் கேட்டுக்கொண்டார்கள். 

அரசு அறிவித்துள்ள பல அரிய திட்டங்களை துறையூர் மக்களுக்கு பெற்றுத்தர என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள் உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தையும் மேம்படுத்தி தருவேன் என்று வேட்பாளர் இந்திராகாந்தி பேசினார். வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது வடக்கு ஒன்றிய செயலாளர் சேனைசெல்வம், தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர்கள் அழகாபுரி செல்வராஜ், ராம்மோகன், மாவட்ட விவசாய அணி பொன் காமராஜ், முன்னாள் யூனியன் சேர்மன் மனோகரன் மற்றும் பேரூராட்சி கழக செயலாளர்கள் ராஜேந்திரன், உப்பிலியபுரம் நகர செயலாளர் ராஜாங்கம், துறையூர் நகர செயலாளர் செக்கர் ஜெயராமன் கிளைக் கழக நிர்வாகிகள் கட்சித் தொண்டர்கள், அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவினர் உள்பட திரளாக கலந்து கொண்டார்கள்.

Next Story