கொரோனா காலத்தில் தமிழக மக்களுக்கு வீடு வீடாக நிவாரண பொருட்களை வழங்கிய ஒரே கட்சி அ.தி.மு.க - அ.தி.மு.க வேட்பாளர் செ.தாமோதரன் பேச்சு


கொரோனா காலத்தில் தமிழக மக்களுக்கு வீடு வீடாக நிவாரண பொருட்களை வழங்கிய ஒரே கட்சி அ.தி.மு.க - அ.தி.மு.க வேட்பாளர் செ.தாமோதரன் பேச்சு
x
தினத்தந்தி 28 March 2021 12:00 PM IST (Updated: 27 March 2021 6:20 PM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளராக அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் நிறுத்தப்பட்டுள்ளார். தேர்தல் நாள் நெருங்கிவருவதால் வேட்பாளர் செ.தாமோதரன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கிணத்துக்கடவு,

இந்நிலையில் நேற்று கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி ஒன்றிய பகுதிக்குட்பட்ட கோடங்கிபாளையம் ,தேரடிபாளையம் லட்சுமி நகர், சொலவம்பாளையம், குமாரபாளையம், கருப்பம்பாளையம், சிக்கலாம்பாளையம், வடபுதூர், கல்லாபுரம் சிங்கையன்புதூர், மூலக்கடை, முத்துக்கவுண்டனூர் பாலார்பதி சொக்கனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிமுக வேட்பாளர் செ.தாமோதரன் கிராமகிராமமாக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இரட்டை இலைசின்னத்திற்க்கு வாக்குகள் வாக்கு சேகரிக்க சென்ற இடங்களில் பட்டாசு வெடித்து பெண்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளர் செ.தாமோதரனுக்கு உற்ச்சாக வரவேற்ப்பு அளித்தனர். அப்போது பொதுமக்களிடம் அதிமுக அரசின் தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குகள் சேகரித்தார். பின்னர் பொதுமக்கள் மத்தியில் பேசிய வேட்பாளர் செ.தாமோதரன் பேசியதாவது:- 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் தமிழகமக்களுக்கு எந்த குறையும் இல்லை ,கொரோனாகாலத்தில் தமிழக மக்களுக்கு வீடு வீடாக நிவாரண பொருட்களை வழங்கிய ஒரே கட்சி அ.தி.மு.க போல்வெல்தண்ணீரை குடிநீராக பயன்படுத்திவந்த கிணத்துக்கடவு பகுதிகிராமமக்களுக்கு நான் கிணத்துக்கடவு தொகுதியில் எம்.எல்.ஏ வாக பணியாற்றியபோதுதான் முன்னால் முதலமைச்சர ஜெயலலிதாவிடம் கூறி கிராமபகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட ஆழியார் தண்ணீர் வழங்கநடவடிக்கை எடுத்தேன் .கிணத்துக்கடவு பகுதியில் தக்காளி விலைவீழ்ச்சியடையும் காலங்களில் தக்காளி வீணாவதை தடுக்க தக்காளி ஜாம் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் .விவசாயிகளின் நலன்கருதி விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கி விவசாயிகளை வறுமையில் இருந்து காப்பாற்றியவர் முதல்-அமைச்சர் எடப்பாடிபழனிச்சாமி.கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்து ஒரு எம்.பியை தேர்ந்தெடுத்தீர்கள்.அவர் எப்போதாவது உங்களை வந்து சந்தித்தது உண்டா? அதுமட்டுமல்ல திமுக கூட்டணியில் கடந்த எம்.பி தேர்தலில் வெற்றிபெற்ற 38. எம்.பிக்களால் தமிழகத்திற்கு எந்தநன்மையும் இல்லை .இந்ததேர்தல் பிரச்சாரத்தில் கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ எட்டிமடை. சண்முகம்.மாவட்ட விவசாயி அணி செயலாளர் மகாலிங்கம், மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஸ்குமார் கிணத்துக்கடவு பேரூராட்சி செயலாளர் மூர்த்தி டி.எல்.சிங். கண்ணம்மாள் ,மனோகரன் ,பிரபு, லட்சுமணன், நஞ்சுண்டமூரத்தி ராதாகிருஷ்ணன், செல்விபத்மினி.பா.ஜனதா கட்சியின் மாநில பொ,துக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி ஒன்றியதலைவர் கிருஷ்ணகுமார் ஒன்றியபொதுச் செயலாளர் .ரவிக்குமார் மற்றும் கூட்டணிகட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Next Story