சென்னையில், ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது போலீஸ் கமிஷனர் பேட்டி


சென்னையில், ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது போலீஸ் கமிஷனர் பேட்டி
x
தினத்தந்தி 7 April 2021 4:14 AM GMT (Updated: 7 April 2021 4:14 AM GMT)

சென்னையில், ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது போலீஸ் கமிஷனர் பேட்டி.

சென்னை, 

சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று இரவு 7.30 மணி அளவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-

சென்னையில் ஓட்டுப்பதிவு முழு அமைதியாக நடந்து முடிந்தது. பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. சட்டம்-ஒழுங்கு முழு கட்டுப்பாட்டில் இருந்தது. மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். நான் சென்னையில் உள்ள வாக்குப்பதிவு மையங்களை நேரில் சென்று பார்வையிட்டேன். பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தோம். கூடுதல் கமிஷனர்கள் செந்தில்குமார், டாக்டர் கண்ணன் ஆகியோரும் அவர்களது எல்லையில் உள்ள வாக்குப்பதிவு மையங்களை நேரில் சென்று பார்வையிட்டனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும்

எடுக்கப்பட்டிருந்தது. போலீசாருக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story