செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 304 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 304 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 7 April 2021 11:42 AM IST (Updated: 7 April 2021 11:42 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 304 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 304 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58 ஆயிரத்து 226 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 54 ஆயிரத்து 912 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 833 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 481 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 137 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 234 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 30 ஆயிரத்து 157 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 464 பேர் உயிரிழந்துள்ளனர். 613 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
1 More update

Next Story