அ.தி.மு.க.-அ.ம.மு.க.வினர் மோதல்


அ.தி.மு.க.-அ.ம.மு.க.வினர் மோதல்
x
தினத்தந்தி 7 April 2021 8:52 PM GMT (Updated: 2021-04-09T22:01:27+05:30)

முதுகுளத்தூர் அருகே அ.தி.மு.க.-அ.ம.மு.க.வினர் மோதல் ஏற்பட்டது.

முதுகுளத்தூர், 

முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது. மாலையில் அ.ம.மு.க.வினர் ஓட்டு போடாத சிலரை ஓட்டுப்போட அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க.வினர் அ.ம.மு.க.வினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அ.ம.மு.க.வை சேர்ந்த பார்த்திபன், சுப்பிரமணியனுக்கு காயம் ஏற்பட்டது. இதேபோல் புழுதி குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஓட்டு போடுவதில் ஏற்பட்ட தகராறில் அ.தி.மு.க.வினர் தாக்கியதில் அ.ம.மு.க.வை சேர்ந்த சண்முகசுந்தரம் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த இரண்டு சம்பவத்தில் காயமடைந்த 3 பேரும் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கீழத்தூவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story