முன்னாள் அமைச்சர் குறித்து அவதூறு தி.மு.க. நிர்வாகி மீது போலீசார் வழக்கு


முன்னாள் அமைச்சர் குறித்து அவதூறு தி.மு.க. நிர்வாகி மீது போலீசார் வழக்கு
x
தினத்தந்தி 8 April 2021 2:29 AM GMT (Updated: 2021-04-08T07:59:28+05:30)

திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான பி.வி.ரமணா போட்டியிடுகிறார்.

அ.தி.மு.க. வேட்பாளர் ரமணா குறித்து திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் கிராமத்தை சேர்ந்த கிஷோர் குமார் சமூக வலைத்தளத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி தனி மனித ஒழுக்கத்துக்கு எதிராக அவதூறு செய்திகளை பரப்பி வந்துள்ளார்.

இது குறித்து அ.தி.மு.க. வேட்பாளர் ரமணா சார்பில் வக்கீல் சவுந்தரராஜன் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார்.இது தொடர்பாக போளிவாக்கம் பகுதியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி கிஷோர் குமார் மீது மணவாள நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 


Next Story