மூர்மார்க்கெட்-சூலூர்ப்பேட்டை இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு


மூர்மார்க்கெட்-சூலூர்ப்பேட்டை இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 13 April 2021 4:40 PM IST (Updated: 13 April 2021 4:40 PM IST)
t-max-icont-min-icon

மூர்மார்க்கெட்-சூலூர்ப்பேட்டை இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.

சென்னை, 

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை சென்டிரல்-கூடூர் பிரிவு இடையே பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* மூர்மார்க்கெட்-சூலூர்ப்பேட்டை இடையே காலை 9.55 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் எளாவூர்-சூலூர்ப்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் சூலூர்ப்பேட்டை-மூர்மார்க்கெட் இடையே மதியம் 1.20 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் சூலூர்ப்பேட்டை-எளாவூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story