மாவட்ட செய்திகள்

முகேஷ் அம்பானி வீட்டு அருகே நிறுத்தப்பட்ட வெடிகுண்டு காரை தொடர்புபடுத்தி 2 பேரை என்கவுன்ட்டரில் கொல்ல சதி? கைதான போலீஸ் அதிகாரியிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் + "||" + Conspiracy to kill 2 people in an encounter in connection with a bomb car parked near Mukesh Ambani's house? Shocking information in the investigation conducted on the arrested police officer

முகேஷ் அம்பானி வீட்டு அருகே நிறுத்தப்பட்ட வெடிகுண்டு காரை தொடர்புபடுத்தி 2 பேரை என்கவுன்ட்டரில் கொல்ல சதி? கைதான போலீஸ் அதிகாரியிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்

முகேஷ் அம்பானி வீட்டு அருகே நிறுத்தப்பட்ட வெடிகுண்டு காரை தொடர்புபடுத்தி 2 பேரை என்கவுன்ட்டரில் கொல்ல சதி? கைதான போலீஸ் அதிகாரியிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்
முகேஷ் அம்பானி வீட்டு அருகே நிறுத்தப்பட்ட வெடிகுண்டு காரை தொடர்புபடுத்தி 2 பேரை போலி என்கவுன்ட்டரில் போட்டு தள்ள கைதான போலீஸ் அதிகாரி சதி திட்டம் தீட்டியதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

வெடிகுண்டு கார் வழக்கு

மும்பையில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டு அருகே கடந்த பிப்ரவரி 25-ந் தேதி வெடிகுண்டு கார் மீட்கப்பட்டது. இதையடுத்து கடந்த மார்ச் 5-ந் தேதி அந்த வெடிகுண்டு காரின் உரிமையாளரான வியாபாரி ஹிரன் மன்சுக் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த வழக்குகள் தொடர்பாக மும்பை குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாசேயை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) கைது செய்து விசாரித்து வருகிறது.

இந்த வெடிகுண்டு கார் சம்பவத்தை தொடர்ந்து மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் இடமாற்றம், மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் ராஜினாமா உள்ளிட்ட பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறி விட்டன. ஆனால் முகேஷ் அம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு கார் நிறுத்தப்பட்டதற்கான காரணம்?, ஹிரன் மன்சுக் எதற்காக கொல்லப்பட்டார்? என்பது தொடர்ந்து மர்மமாகவே உள்ளது.

போலி என்கவுன்ட்டர் திட்டம்

ஏதோ மிகப்பெரிய சதி திட்டத்திற்காக முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிகுண்டு கார் நிறுத்தப்பட்டு இருக்கலாம் என்று என்.ஐ.ஏ. தரப்பு கூறியது. இந்தநிலையில் சம்பவம் நடந்து 2 மாதத்தை நெருங்கிய நிலையில், தற்போது தீவிர விசாரணையில் புதிய திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. போலி என்கவுன்ட்டர் திட்டத்திற்காக அங்கு வெடிகுண்டு நிரப்பிய கார் நிறுத்தப்பட்டு இருப்பதாக வழக்கை விசாரிக்கும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கைதான போலீஸ் அதிகாரி சச்சின் வாசே என்கவுன்ட்டர் பெஷலிஸ்ட் ஆவார். தானேயில் உள்ள அவரது வீட்டில் ஒருவரின் பாஸ்போர்ட்டு என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் சிக்கியது. பாஸ்போர்ட்டில் உள்ள நபர் மற்றும் இன்னொரு நபர் ஆகிய 2 பேரை போலி என்கவுன்ட்டரில் போட்டு தள்ள சச்சின் வாசே திட்டமிட்டு இருந்துள்ளார். அவர்கள் 2 பேரை முகேஷ் அம்பானி வீட்டு அருகே நிறுத்தப்பட்ட வெடிகுண்டு கார் வழக்குடன் தொடர்புபடுத்தி போலி என்கவுன்ட்டரில் சுட்டு தள்ளி வழக்கை முடித்து வைக்க கருதியுள்ளார்.

பாராட்டு பெற...

இதன் மூலம் பாராட்டுகளையும், பதவி உயர்வையும் பெற அவர் திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த சதி திட்டம் பலனளிக்காமல் புஸ்வானமாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

எனவே வெடிகுண்டு கார் வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தற்போது போலி என்கவுன்ட்டர் கோணத்தில் விசாரிக்க தொடங்கி உள்ளனர். வெடிகுண்டு கார் வழக்கு மராட்டிய அரசியலில் புயலை கிளப்பிய நிலையில், தற்போது அது போலி என்கவுன்ட்டர் சதி திட்டத்திற்காக செய்யப்பட்டது என்று கூறப்படுவது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கு விதிகளை பின்பற்றாதவர்கள் மீது வழக்கு; செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
ஊரடங்கு விதிகளை பின்பற்றாமல் இரு சக்கர வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் கூறினார்.
2. ஆவடியில் போலீஸ்காரரின் மனைவி தற்கொலை
ஆவடியை அடுத்த வீராபுரம் புதிய கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் கண்ணபிரசாத்.
3. வண்டலூர் மேம்பாலம் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் பலி; மற்றொருவர் காயம்
வண்டலூர் மேம்பாலம் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் பலியானார்.
4. கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி துணை போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
காஞ்சீபுரத்தை அடுத்த திம்மசமுத்திரம் அருகே சித்தேரிமேடு கிராமத்தில் கடந்த 13-ந்தேதி துரையரசன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
5. வழக்கு விவரங்கள் அரசு வக்கீல்களுக்கு முறையாக தெரிவிக்கப்படும்; ஐகோர்ட்டில் போலீஸ் கமிஷனர் உறுதி
வழக்கு குறித்த விவரங்கள் அரசு வக்கீல்களுக்கு முறையாக தெரியப்படுத்தப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.