மராட்டியத்தில் 3-வது தடவையாக 60 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு; 349 பேர் பலியான பரிதாபம்


மராட்டியத்தில் 3-வது தடவையாக 60 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு; 349 பேர் பலியான பரிதாபம்
x
தினத்தந்தி 16 April 2021 10:01 AM GMT (Updated: 16 April 2021 10:01 AM GMT)

மராட்டியத்தில் புதிதாக 61 ஆயிரத்து 695 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூலம் 3-வது தடவையாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை தாண்டியது. 349 பேர் பலியானார்கள்.

61,695 பேர்

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் காட்டு தீயைவிட வேகமாக பரவி வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் 61 ஆயிரத்து 695 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டனர்.கடந்த 11-ந் தேதி 63 ஆயிரத்து 294 பேரும், கடந்த 13-ந் தேதி 60 ஆயிரத்து 212 பேரும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனால் 3-வது முறையாக பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்து உள்ளது.

மேலும் தொற்று பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 36 லட்சத்து 39 ஆயிரத்து 855 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 29 லட்சத்து 59 ஆயிரத்து 56 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று மட்டும் 53 ஆயிரத்து 335 பேர் குணமாகினர்.தற்போது மாநிலம் முழுவதும் 6 லட்சத்து 20 ஆயிரத்து 60 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 35 லட்சத்து 87 ஆயிரத்து 478 பேர் வீடுகளிலும், 27 ஆயிரத்து 273 பேர் தனிமை மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

349 பேர் பலி

இதேபோல மாநிலத்தில் மேலும் 349 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதனால் இதுவரை வைரஸ் நோய்க்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 59 ஆயிரத்து 153 ஆக அதிகரித்து உள்ளது. மாநிலத்தில் நோய் பாதித்தவர்களில் 81.3 சதவீதம் பேர் குணமாகி உள்ளனர். 1.63 சதவீதம் பேர் உயிரிழந்து உள்ளனர்.

புனே மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று புனே புறநகரில் 2 ஆயிரத்து 455 பேருக்கும், நகரில் 5 ஆயிரத்து 469 பேருக்கும், பிம்பிரி சிஞ்வட்டில் 2 ஆயிரத்து 37 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோல தானே புறநகரில் 1,024 பேருக்கும், மாநகராட்சி பகுதியில் 1,597 பேருக்கும், நவிமும்பையில் 1,184 பேருக்கும், கல்யாண் டோம்பிவிலியில் 1,611 பேருக்கும் வைரஸ் நோய் கண்டறியப்பட்டுள்ளது.


Next Story