காஞ்சீபுரத்தில் மீன் வாங்க சமூக இடைவெளியின்றி கூடிய பொதுமக்கள் கொரோனா தொற்று பரவும் அபாயம்


காஞ்சீபுரத்தில் மீன் வாங்க சமூக இடைவெளியின்றி கூடிய பொதுமக்கள் கொரோனா தொற்று பரவும் அபாயம்
x
தினத்தந்தி 19 April 2021 1:56 AM GMT (Updated: 2021-04-19T07:26:43+05:30)

காஞ்சீபுரத்தில் மீன் வாங்க சமூக இடைவெளியின்றி கூடிய பொதுமக்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காஞ்சீபுரம், 

ஞாயிற்றுக்கிழமையான நேற்று மீன் கடைகளில் அதிக அளவில் பொதுமக்கள் குவிந்தனர்.

அந்த வகையில் நேற்று காஞ்சீபுரம் பெருநகராட்சி பகுதியிலுள்ள பொன்னேரிக்கரை மீன் சந்தை பகுதியில் மீன் வாங்குவதற்காக ஏராளமான அசைவ பிரியர்கள் ஒரே நேரத்தில் சமூக இடைவெளியின்றி கூடினர்.

கொரோனா தொற்று பரவும் அபாயம்

காஞ்சீபுரம் நகராட்சி பகுதிகளில் ஏற்கனவே கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் பொதுமக்கள் ஏராளமானோர் சமூக இடைவெளியின்றி மீன் மார்க்கெட்டில் கூடியதால் காஞ்சீபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மேலும் கொரோனா தொற்று வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Next Story