ஸ்ரீபெரும்புதூர் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலி

ஸ்ரீபெரும்புதூர் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.
சென்னை அபிராமிபுரம் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜ். பரத நாட்டிய கலைஞர். இவரது மகள் சாரதா (வயது 35). எம்.பி.ஏ., ஆன்லைன் வகுப்பில் படித்து வந்தார். இவருக்கு காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வெங்காடு ஊராட்சி அருகே அடுக்கு மாடி குடியிருப்பில் சொந்தமாக வீடு உள்ளது. அவர் அங்கு தங்கி படித்து வந்தார். வாரத்துக்கு ஒரு முறை வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று வந்தார். நேற்று ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சென்னைக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும்போது காஞ்சீபுரதில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற அரசு பஸ் சாரதா ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சாரதா பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story






