குன்றத்தூர் பேரூராட்சியில் ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா தொற்று


குன்றத்தூர் பேரூராட்சியில் ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 20 April 2021 12:56 AM GMT (Updated: 20 April 2021 12:56 AM GMT)

குன்றத்தூர் பேரூராட்சியில் ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

பூந்தமல்லி, 

கொரோனாவின் 2-ம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், குன்றத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் நேற்று ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அதில் சிலர் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்காத வகையில் பல்வேறு இடங்களில் கிருமிநாசினிகளும் தெளிக்கப்பட்டு வருகிறது.

அபராதம்

இந்த நிலையில், முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கும், கடைகளில் சமூக விலகளை முறையாக கடைப்பிடிக்காத கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக ரூ.86 ஆயிரத்து 300 அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது.

இதுவரை பேரூராட்சியில் 222 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 112 பேர் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர். இதில் 2 பேர் இறந்துள்ளனர். தற்போது 108 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினமும் கொரோனோ தடுப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் குன்றத்தூர் பேரூராட்சி அதிகாரி முகமது ரிஸ்வான் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார்.

Next Story