காஞ்சீபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் இயங்கி வந்த பூ மார்க்கெட் இடம் மாற்றம்


காஞ்சீபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் இயங்கி வந்த பூ மார்க்கெட் இடம் மாற்றம்
x
தினத்தந்தி 29 April 2021 4:31 AM GMT (Updated: 29 April 2021 4:31 AM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இநதநிலையில் காஞ்சீபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் இயங்கி வந்த பூ வணிக வளாகங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதால் அந்த பகுதியில் வியாபாரம் செய்ய மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தடை விதித்தார். பூ வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்காத வண்ணம் அருகில் உள்ள பள்ளி வளாகத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டு அங்கு தற்காலிக பூ வணிக வளாகத்தை அமைத்துள்ளனர்.

மேலும் பள்ளி மைதானத்தில் அதற்கான தடுப்புகள் அமைத்துள்ளனர் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பூ வியாபாரத்தை முழுமையாக நடத்த உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story