வண்டலூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்


வண்டலூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 29 April 2021 10:05 AM IST (Updated: 29 April 2021 10:05 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் வண்டலூர் ஊராட்சியில் உள்ள ஓட்டேரி விரிவு பகுதி சமுதாய கூடத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் வண்டலூர் ஊராட்சியில் உள்ள ஓட்டேரி விரிவு பகுதி சமுதாய கூடத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மனோஜ் குமார், வண்டலூர் ஊராட்சி மன்ற செயலர் வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த சிறப்பு முகாமில் ஓட்டேரி பகுதியை சேர்ந்த ஏராளமான முதியவர்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் வந்து கொரோனா முதல் தவணை தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.

இந்த முகாமில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் விக்னேஸ்வரன், நர்சுகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 


Next Story