மராட்டியத்தில் மேலும் 66,159 பேருக்கு கொரோனா; 771 பேர் உயிரிழப்பு


மராட்டியத்தில் மேலும் 66,159 பேருக்கு கொரோனா; 771 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 29 April 2021 11:51 PM GMT (Updated: 29 April 2021 11:51 PM GMT)

மராட்டியத்தில் கடந்த 14-ந் தேதி முதல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

எனினும் நோய் பரவல் அதிகமாகவே உள்ளது. மாநிலத்தில் நேற்று புதிதாக 66 ஆயிரத்து 159 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 45 லட்சத்து 39 ஆயிரத்து 553 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 37 லட்சத்து 99 ஆயிரத்து 266 பேர் குணமாகி உள்ளனர். நேற்று மட்டும் 68 ஆயிரத்து 537 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 6 லட்சத்து 70 ஆயிரத்து 301 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் மேலும் 771 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை 67 ஆயிரத்து 985 பேர் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து உள்ளனர்.

தலைநகர் மும்பையில் புதிதாக 5 ஆயிரத்து 650 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 44 ஆயிரத்து 699 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல நகரில் மேலும் 82 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை தொற்றுக்கு 13 ஆயிரத்து 72 பேர் உயிரிழந்து உள்ளனர். நகரில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 79 நாட்களாக உள்ளது.


Next Story