கொரோனா தாக்குதலில் இருந்து உலக மக்கள் விடுபட வேண்டி நாலாயிர திவ்விய பிரபந்தம் வாசிக்கும் நிகழ்ச்சி தொடக்கம்


கொரோனா தாக்குதலில் இருந்து உலக மக்கள் விடுபட வேண்டி நாலாயிர திவ்விய பிரபந்தம் வாசிக்கும் நிகழ்ச்சி தொடக்கம்
x
தினத்தந்தி 30 April 2021 3:08 AM GMT (Updated: 30 April 2021 3:08 AM GMT)

கொரோனா தாக்குதலில் இருந்து உலக மக்கள் விடுபட வேண்டியும், உலக நன்மை வேண்டியும் நாலாயிர திவ்விய பிரபந்தம் வாசிக்கும் நிகழ்வு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் குலசேகர ஆழ்வார் ராமானுஜர் கூடத்தில் நடந்தது.

குலசேகர ஆழ்வார் ராமானுஜர் அறக்கட்டளை தலைவர் சுவாமி நெய்குப்பி கிருஷ்ணராமானுஜதாசன் தலைமையில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர், மாமல்லபுரம்தலசயன பெருமாள், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் சாமி படங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கொரோனா தாக்குதலில் இருந்து மக்கள் விடுபட வேண்டியும், நோய் தொற்றில் இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டியும் நாலாயிர திவ்விய பிரபந்தம் வாசிப்பு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

நேற்று தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் இறுதி நாளன்று கொரோனா தாக்குதலில் இருந்து மக்கள் விடுபட வேண்டியும், மக்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டியும் வைணவ ஆகம முறைப்படி சிறப்பு யாகம் நடைபெறுகிறது.

 


Next Story