போலீசை தாக்கிய 3 பேர் கைது


போலீசை தாக்கிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 7 May 2021 9:24 AM IST (Updated: 7 May 2021 9:24 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் போலீசை தாக்கிய 3 பேரை கைது செய்தனர்.

உத்திரமேரூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் திருமலை. இவர் நேற்று டாஸ்மாக் கடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியான நிலையில் டாஸ்மாக் கடையில் மது பிரியர்கள் ஏராளமானோர் கூடினர். கடை மூடும் நேரம் என்பதால் அங்கு வந்த 3 பேரை திருமலை தடுத்து திரும்பி செல்லும்படி கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் போலீஸ் காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்களில் ஒருவர் கீழே கிடந்த கல்லால் போலீஸ்காரரின் தலையில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கு இருந்தவர்கள் உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

இது குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரரை தாக்கியதாக உத்திரமேரூர் பேரூராட்சி ஆணை பள்ளத்தை சேர்ந்த செந்தில் (வயது 37), குப்பைய நல்லூரை சேர்ந்த பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் (50) மற்றும் அதே ஊரை சேர்ந்த திருமூர்த்தி (25) ஆகியோரை கைது செய்தனர்.
1 More update

Next Story