காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் ஆய்வு
காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
காஞ்சீபுரம்,
தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் திரவ ஆக்சிஜன் சேமிப்பு மையம் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் தாய் மற்றும் குழந்தை ஆரோக்கிய கட்டிடத்தை பார்வையிட்டு அங்கு நடைபெற்று வரும் பணிகளை துரிதப்படுத்துமாறு கேட்டு்கொண்டார்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
முன்னதாக காஞ்சீபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், காஞ்சீபுரம் எம்.பி. ஜி.செல்வம், உத்திரமேரூர் எம்.எல்.ஏ. க.சுந்தர், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story