தனியார் நிறுவனத்தில் செல்போன் திருடிய வாலிபர் கைது
திருவள்ளூர் உள்ளுறை அடுத்த காக்களூர் பகுதியில்தனியார் நிறுவனத்தில் செல்போன் திருடிய வாலிபர் கைது செய்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் உள்ளுறை அடுத்த காக்களூர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. அந்த தனியார் மோட்டார் சர்வீஸ் நிறுவனத்தில் நேற்று முன்தினம் 2 செல்போன்கள் திருட்டு போனது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அந்த செக்யூரிட்டி அலுவலகத்தின் நிர்வாக மேலாளர் சுப்பிரமணி திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார்.
அதைத்தொடர்ந்து, போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில், தனியார் கம்பெனியில் செல்போன்களை திருடியது சென்னை கொரட்டூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த கோவிந்தன் (வயது 43) என தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story