மாவட்ட செய்திகள்

வாலாஜாபாத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகை திருட்டு + "||" + Breaking the lock of a house in Walajabad and stealing 21 sovereigns of jewelery

வாலாஜாபாத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகை திருட்டு

வாலாஜாபாத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகை திருட்டு
வாலாஜாபாத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகை திருடப்பட்டது.

சொந்த ஊருக்கு சென்றார்

வாலாஜாபாத் சேர்க்காடு அருகே உள்ள மெக்ளின்புரத்தை சேர்ந்தவர் மோகன் குமார். வாலாஜாபாத் ராஜ வீதியில் துணிகடை வைத்துள்ளார். மோகன் குமார் தனது தந்தையின் ஈமக்கிரியை காரியத்துக்காக வீட்டை பூட்டிவிட்டு தனது சொந்த ஊரான வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரிக்கு குடும்பத்தினருடன் சென்றார். தனது வீட்டை பார்த்து கொள்ளுமாறு வாலாஜாபாத்தில் வசிக்கும் தனது மாமனார் ராமச்சந்திரனிடம் கூறி விட்டு சென்றார்.

இந்த நிலையில் ராமச்சந்திரன், மோகன் குமாரின் வீட்டுக்கு சென்ற போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வாலாஜாபாத் போலீசில் புகார் செய்யப்பட்டது.

21 பவுன் நகை திருட்டு

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 21 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.இதையடுத்து சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

இது குறித்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டார். மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இதையடுத்து மோகன்குமாரின் மாமனார் ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 


தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார் சைக்கிள் திருட்டு
சங்கரன்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.
2. குற்றாலம் கோவிலில் விநாயகர் சிலை திருட்டு
குற்றாலம் கோவிலில் விநாயகர் சிலை திருட்டு போனது.
3. மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போலீசில் புகார்
மோட்டார் சைக்கிள்கள் திருட்டு குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
4. வீட்டு உபயோக பொருட்கள் மொத்த விற்பனை கடையில் ரூ.2 லட்சம் திருட்டு
விழுப்புரத்தில் வீட்டு உபயோக பொருட்கள் மொத்த விற்பனை கடையில் ரூ.2 லட்சத்தை திருடிச்சென்ற சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. ஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
ஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்டது