கொரோனா நிவாரண நிதிக்காக ரேஷன் கார்டு வாங்க சமூக இடைவெளியின்றி திரண்ட பொதுமக்கள்


கொரோனா நிவாரண நிதிக்காக ரேஷன் கார்டு வாங்க சமூக இடைவெளியின்றி திரண்ட பொதுமக்கள்
x

கொரோனா நிவாரண நிதிக்காக ரேஷன் கார்டு வாங்க சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் திரண்டனர்.

பூந்தமல்லி, 

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற அன்றே 5 முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். அதில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக இந்த மாதம் முதல்கட்டமாக ரூ.2 ஆயிரம் அடுத்த மாதம் ரூ.2 ஆயிரம் வழங்குவதாக கையெழுத்திட்டார். இந்த நிலையில் தற்போது அந்த திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள நிலையில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

குன்றத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் புதிதாக ரேஷன் கார்டுக்கு பதிவு செய்தவர்கள் அதனை வாங்குவதற்கு நேற்று காலை குன்றத்தூர் தாலுகா அலுவலகத்தில் அதிக அளவில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சமூக இடைவெளியுடன்

மேலும் போதிய ஊழியர்கள் இல்லாத காரணத்தால் அங்கு பணிபுரியும் 2 பேர் மட்டும் வந்தவர்களை ஒவ்வொருவராக பெயர் சொல்லி அழைத்து ரேஷன் கார்டுகளை வழங்கினார்கள்.

குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கூட்டமாக இருந்தவர்களை சமூக இடைவெளியுடன் நிற்கவைத்தனர்.

Next Story