காஞ்சீபுரம், செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச உணவு பொட்டலங்கள்

காஞ்சீபுரம், செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
காஞ்சீபுரம்,
தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கும், அவர்களது உதவியாளர்களுக்கும் உணவு பொட்டலங்கள் வழங்கிடுமாறு அறநிலையத்துறை தலைமை உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 500 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. காஞ்சீபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் உணவு தயாரிக்கப்பட்டு அறநிலையத்துறை பணியாளர்கள் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு உணவு பொட்டலங்கள் அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் கல்பனாவிடம் வழங்கப்பட்டது.
அறநிலையத்துறை இணை ஆணையாளர் பொன். ஜெயராமன் அவற்றை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர்கள் குமரன், தியாகராஜன் உள்பட அறநிலையத்துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் இந்து சமய அறநிலையத்துறை செங்கல்பட்டு மாவட்டம் சார்பில் தினமும் 500 உணவு பொட்டலங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி காஞ்சீபுரம் மண்டல இணை ஆணையர் அறிவுறுத்தலின்படி நேற்று செங்கல்பட்டு ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 500 பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை உதவி ஆணையர் கவெனிதா, ஆஸ்பத்திரி டீன் முத்துகுமார், செயல் அலுவலர்கள் செந்தில்குமார், வெங்கடேசன், சிவசண்முக பொன்மணி, தி.மு.க. நகர செயலாளர் நரேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






