காஞ்சீபுரத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் ஆய்வு கூட்டம்
காஞ்சீபுரத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் ஆய்வு கூட்டம் நடந்தது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கொரோனா 2-ம் அலை பரவல் குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க எடுக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக மருத்துவம், வருவாய், உள்ளாட்சித் துறை, மாவட்ட அலுவலர்கள் மற்றும் கள அலுவலர்களிடம் ஆய்வு கூட்டம் நடந்தது.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் புவியியல் சுரங்க துறை இயக்குனர் எல்.சுப்பிரமணியன், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கொரோனா பரிசோதனை
முன்னதாக காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யக்கூடிய கொரோனா தொற்று நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனத்தை, தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த கூட்டத்தில் காஞ்சீபுரம் எம்.பி. செல்வம், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் காவல்துறை தலைவர் சாரங்கன், காவல்துறை துணைத்தலைவர் சாமுண்டீஸ்வரி, எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், கு.செல்வபெருந்தகை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.சண்முகபிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story