காஞ்சீபுரத்தில் கொரோனா நோயாளி‌ 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை


காஞ்சீபுரத்தில் கொரோனா நோயாளி‌ 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை
x
தினத்தந்தி 14 May 2021 4:33 PM IST (Updated: 14 May 2021 4:33 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் கொரோனா நோயாளி‌ 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

காஞ்சீபுரம் பெருமாள் கோவில் அருகே வசித்து வந்தவர் 54 வயதானவர். இவர் கடந்த 11-ந்தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காஞ்சீபுரம்‌ செட்டியார் பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மதியம் 2 மணியளவில் ஆஸ்பத்திரி 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காஞசீபுரம் தாலுகா போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொேரானா தொற்று காரணமாக அவர் நேற்று முதல் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், இநதநிலையில் இது போன்ற முடிவு எடுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

Next Story