ஒடிசாவில் இருந்து சரக்கு ரெயிலில் 26.6 டன் ஆக்சிஜனை நிரப்பி கொண்டு 2 லாரிகள் திருவள்ளூர் வந்தடைந்தன


ஒடிசாவில் இருந்து சரக்கு ரெயிலில் 26.6 டன் ஆக்சிஜனை நிரப்பி கொண்டு 2 லாரிகள் திருவள்ளூர் வந்தடைந்தன
x
தினத்தந்தி 16 May 2021 10:27 AM GMT (Updated: 16 May 2021 10:27 AM GMT)

ஒடிசாவில் இருந்து சரக்கு ரெயில் உதவியுடன் 26.6 டன் ஆக்சிஜனை நிரப்பி கொண்டு 2 லாரிகள் திருவள்ளூர் வந்தடைந்தது.

ஒடிசாவிலிருந்து...

தமிழகத்தில் கொரோனா வைரசின் 2-வது அலையால் தொற்று தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இருப்பினும் இதன் தாக்கம் குறையவில்லை.இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வருவதற்காக திருவள்ளூர் ரெயில் நிலையத்திலிருந்து 2 மருத்துவ காலி லாரிகள் சிறப்பு சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் மீண்டும் ஒடிசாவிற்கு மேலும் 3 லாரிகளையும் தெற்கு ரெயில்வே நிர்வாகம் அனுப்பி வைத்தது. மொத்தம் 5 மெடிக்கல் காலி லாரிகள் ஒடிசா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

26.6 டன் ஆக்சிஜன் வந்தது

இந்தநிலையில் கடந்த 12-ந் தேதியன்று திருவள்ளூரில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட 2 மருத்துவ லாரிகள் ஒடிசாவில் இருந்து 26.6 டன் ஆக்சிஜன் ஏற்றிக்கொண்டு நேற்று திருவள்ளூர் வந்தடைந்தது.

திருவள்ளூர் கொண்டு வரப்பட்ட அந்த 2 ஆக்சிஜன் லாரிகளையும் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கும், சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கும் ரெயில்வே நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் ஆக்சிஜனை நிரப்பி வருவதற்காக நேற்று இரவு திருவள்ளூர் ரெயில் நிலையத்திலிருந்து ஒடிசாவுக்கு மேலும் 4 லாரிகள் சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story