சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு பாதிப்புள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்; சுகாதாரத்துறை செயலர் அறிவுரை


சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு பாதிப்புள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்; சுகாதாரத்துறை செயலர் அறிவுரை
x
தினத்தந்தி 17 May 2021 11:36 AM GMT (Updated: 17 May 2021 11:36 AM GMT)

சர்க்கரை நோய், ரத்தகொதிப்பு பாதிப்பு உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று சுகாதாரத்துறை செயலர் அறிவுரை கூறினார்.

தடுப்பூசி திருவிழா

புதுச்சேரியில் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தடுப்பூசி திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது. இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை, ஜிப்மர், ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்த திருவிழா நடந்தது. இது நேற்றுடன் முடிவடைந்தது.

தடுப்பூசி திருவிழாவில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.இந்தநிலையில் சுகாதாரத்துறை செயலாளர் அருண் நேற்று காலை இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போடும் பணியை ஆய்வு செய்தார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இதய, சர்க்கரை நோய்

சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, இதய நோய் போன்ற நோய் உள்ளவர்களுக்கு கொரோனா அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவதால், அவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி தொடர்ந்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 45 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தவறாமல் தடுப்பூசி எடுத்துக்கொண்டு தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.


Next Story