சோழிங்கநல்லூரில் வாகன ஓட்டிகளுக்கு அபராதம்


சோழிங்கநல்லூரில் வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 18 May 2021 4:31 PM IST (Updated: 18 May 2021 4:31 PM IST)
t-max-icont-min-icon

சோழிங்கநல்லூரில் வாகன ஓட்டிகளுக்கு அபராதம்.

சோழிங்கநல்லூர்,

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர வருகின்ற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் நேற்று முதல் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு, முக்கிய அத்தியாவசிய தேவைகளான இறப்பு, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட தேவைகளுக்காக மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு வெளியேயும் பயணம் செய்ய இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பல இடங்களில் போலீசார் வாகன சோதனை நடத்தி, தேவையில்லாமல் ஊர் சுற்றுபவர்களை எச்சரித்து அபராதம் விதிக்கின்றனர்.

நேற்று பழைய மாமல்லபுரம் சாலை, சோழிங்கநல்லூர் குமரன் நகர் பகுதியில், செம்மஞ்சேரி போலீசார் வாகன சோதனை நடத்தி வாகனங்களில் பயணிப்பவர்கள் முறையான ஆவணம் வைத்துள்ளனரா? என சோதனை செய்தனர். மேலும் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
1 More update

Next Story