இ-பதிவு முறை அமல்படுத்தப்பட்டதால் போலீசார் தீவிர வாகன சோதனை


இ-பதிவு முறை அமல்படுத்தப்பட்டதால் போலீசார் தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 19 May 2021 11:46 AM GMT (Updated: 19 May 2021 11:46 AM GMT)

இ-பதிவு முறை அமல்படுத்தப்பட்டதால் போலீசார் தீவிர வாகன சோதனை.

காஞ்சீபுரம்,

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகரிப்புக்கு ஏற்ப ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டத்திற்கு செல்ல வேண்டுமென்றால் இ-பதிவு முறை செய்த பிறகே செல்ல வேண்டும் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில் மாவட்ட எல்லைப்பகுதியான பெருநகர், தாமல், செவிலிமேடு, செட்டிபேடு, மணிமங்கலம், உள்ளாவூர், வடக்கு பட்டு, பொன்னியம்மன்பட்டரை போன்ற 20- க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வெளிமாவட்டங்களில் இருந்து வாகனங்களில் காஞ்சீபுரத்திற்கு யார்? யார்? வருகிறார்கள் என்பதை கண்காணித்து வருகின்றனர். கார்களில் வந்தவர்களை போலீசார் நிறுத்தி இ-பதிவு முறை பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதற்கான ஆவணங்களை காண்பித்த பிறகு அவர்களை மாவட்டத்திற்குள் செல்ல அனுமதித்தனர்.

காஞ்சீபுரம் திருவள்ளூர் மாவட்ட எல்லையான செட்டிபேடு பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Next Story