திருத்துறைப்பூண்டி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்


திருத்துறைப்பூண்டி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 May 2021 2:09 PM GMT (Updated: 19 May 2021 2:09 PM GMT)

திருத்துறைப்பூண்டி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்ைட போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டியில் நேற்று ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணை தலைவர் ராமகிருஷ்ணன், ஒன்றிய ஆணையர்கள் தமிழ்ச்செல்வன், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் உறுப்பினர்களிடையே நடைபெற்ற விவாதம் வருமாறு:-

ஆரோக்கியமேரி (தி.மு.க.):-

வரம்பியம் ஊராட்சி பகுதிகளில் உள்ள குளங்கள், வாய்க்கால்களை தூர்வார வேண்டும். கொரோனா பரிசோதனையை முறையாக மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை வேண்டும்.

பக்கிரியம்மாள் (தி.மு.க.):-

கச்சனம் பகுதியில் உள்ள குளங்களை தூர்வார வேண்டும். குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீர் ேதவையான அளவு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

ரேஷன் கடை கட்ட வேண்டும்

சரஸ்வதி (தி.மு.க.):-

சேகல் பகுதியில் ரேஷன் கடை கட்டித்தர வேண்டும். நகல் உடையான் இருப்பு பகுதியில் நீர்த்தேக்கத்தொட்டி கட்டவும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாரியம்மாள் (இந்திய கம்யூனிஸ்டு):-.

மேலமருதூர் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதை சரி செய்ய வேண்டும்.

மன்மதன் (சுயேச்சை):-

சங்கமேடு சாலையை சரி செய்ய வேண்டும். பள்ளங்கோவில் பகுதியில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகேசன் (அ.தி.மு.க.):-

குடிநீர் தேவை அதிகரிப்பதால் மணலி, சாத்தங்குடி ஆகிய இடங்களில் கூடுதலாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

விரைவில் நிதி ஒதுக்கப்படும்

ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர்:- புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு திருத்துறைப்பூண்டி ஒன்றியத்துக்கான அனைத்து திட்டங்களுக்கான நிதியையும் விரைவில் ஒதுக்கும். நிதி ஒதுக்கிய உடன் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். கொரோனாவால் அதிக உயிரிழப்பு ஏற்படுவதால், அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில் பங்கேற்ற வட்டார மருத்துவ அலுவலர் கவுரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story