புனேவில் இருந்து 2 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தது


புனேவில் இருந்து 2 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தது
x
தினத்தந்தி 23 May 2021 9:09 AM IST (Updated: 23 May 2021 9:09 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஆலந்தூர்,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். எனவே தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக வழங்கும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. அதை ஏற்று மத்திய அரசும் தமிழகத்துக்கு தடுப்பூசிகளை அனுப்பி வருகிறது.

இந்தநிலையில் புனேவில் இருந்து 2 லட்சத்து 23 ஆயிரம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் விமானத்தில் சென்னை வந்தது. 20 பாா்சல்களில் வந்த தடுப்பூசி மருந்துகளை சென்னை விமான நிலையத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறையினா் பெற்றுக் கொண்டு சென்னையில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்கிற்கு எடுத்துச் சென்றனா். அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story