கொரடாச்சேரி பகுதியில் 41 பேருக்கு கொரோனா 8 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து தடுப்புகள் அமைப்பு
கொரடாச்ே்சரி பகுதியில் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 8 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
கொரடாச்சேரி,
நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றின் 2-வது அலை தீவிரமாகி வருகிறது. இதனால் தொற்று பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரடாச்சேரி ஒன்றியத்தில் நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து அந்தப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்பு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி கொரடாச்சேரி ஒன்றியத்தில் பெருந்தரக்குடி ஊராட்சி மேம்பலத்தில் ஒரே பகுதியில் 6 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருமாஞ்சோலையில் 4 பேருக்கும், அம்மையப்பனில் 4 பேருக்கும், திருவிடைவாசல் ஊராட்சியில் 7 பேருக்கும், வடகண்டத்தில் 5 பேருக்கும், கொரடாச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட வெள்ளைமதகு பகுதியில் 4 பேருக்கும், ஊர்குடியில் 2 இடங்களில் 11 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
8 இடங்களில் தடுப்புகள் அமைப்பு
கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளான 8 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கொரடாச்சேரி ஒன்றியத்தில் தடைசெய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் பகுதிகளில் டாக்டர் விவேக் தலைமையில் சுகாதார குழுவினர் சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஒன்றியக்குழு தலைவர் உமாபிரியா பாலச்சந்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கூத்தாநல்லூர்
இதேபோல் கூத்தாநல்லூர் பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் மேற்ெ்காள்ளப்பட்ட

Related Tags :
Next Story