நீடாமங்கலத்தில் ஒரே நாளில் 385 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது


நீடாமங்கலத்தில் ஒரே நாளில் 385 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது
x
தினத்தந்தி 28 May 2021 5:54 PM GMT (Updated: 28 May 2021 5:54 PM GMT)

நீடாமங்கலத்தில் நேற்று ஒரே நாளில் 385 பேருக்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி முதல் தவணையாக போடப்பட்டது.

நீடாமங்கலம்,

நீடாமங்கலம் வட்டாரம் கோவில்வெண்ணி அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் சார்பில் நீடாமங்கலத்தில் உள்ள 2 பள்ளிகளில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடந்தன. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராணிமுத்துலட்சுமி தலைமையிலும் சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மேற்பார்வையிலும் இந்த முகாம்கள் நடந்தன. 2 முகாம்களிலும் 18 வயது முதல் 44 வயது வரை உள்ள 278 பேரும், 45 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 107 பேரும் என மொத்தம் 385 பேர் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை முதல் தவணையாக போட்டுக்கொண்டனர்.

ஆர்வம்

கொரோனா பரவல் வேகம் அதிகரித்து இருப்பதால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்து உள்ளது. இதனால் முகாம்களில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தடுப்பூசி ேபாட்டுக்கொண்டனர்.

மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ .முகாம்களை நேரில் பார்வையிட்டார்.

Next Story