மாநகராட்சி சார்பில் பெட்ரோல் நிலைய ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி


மாநகராட்சி சார்பில் பெட்ரோல் நிலைய ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 30 May 2021 8:35 AM IST (Updated: 30 May 2021 8:35 AM IST)
t-max-icont-min-icon

மாநகராட்சி சார்பில் பெட்ரோல் நிலைய ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி.

சென்னை,

சென்னையில் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 100 சதவீதம் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதனை செயல்படுத்தி வருகிறது.

இந்தநிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முகாம்கள் அமைத்து, கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று வடசென்னை பகுதியில் உள்ள 41 பெட்ரோல் நிலையங்களில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு, சூளை ராஜாமுத்தையா சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் மாநகராட்சி சார்பில் முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது.

இதில் 45 வயதுக்கு மேற்பட்ட 30 ஊழியர்களும், 18 முதல் 44 வயதுக்கு உட்பட்ட 120 ஊழியர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தொடர்ந்து அனைத்து பெட்ரோல் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story