காஞ்சீபுரத்தில் வாலிபருக்கு கத்திகுத்து; தொழிலாளி கைது
காஞ்சீபுரத்தில் வாலிபருக்கு கத்திகுத்து; தொழிலாளி கைது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் கைலாசநாதர் கோவில் மேட்டு தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது 20). இவரது நண்பர் சின்னராசு (20). இவர்கள் இருவரும் புத்தேரி குமரன் நகரில் உள்ள மைதானத்தில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். பெரிய காஞ்சீபுரம் ராயன் குட்டை பள்ளத்தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளியான கோவிந்தா என்கிற கோவிந்தராஜ் (27) என்பவருக்கும் சின்னராசுவுக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், சின்னராசுவை கத்தியால் வெட்டுவதற்கு கோவிந்தராஜ் தனது நண்பரான தாமோதரன் (25) என்பவரை அழைத்துகொண்டு அங்கு வந்தார்.
இருசக்கர வாகனத்தில் கோவிந்தராஜ் கத்தியோடு வருவதை பார்த்த சின்னராசு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். சந்தோஷ்குமாரை, கோவிந்தராஜ் கத்தியால் உடம்பில் பல்வேறு இடங்களில் குத்தி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டார். படுகாயங்களுடன் இருந்த சந்தோஷ்குமாரை அங்கு இருந்தவர்கள் மீட்டு காஞ்சீபுரம் ஏனாத்தூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இது குறித்து சந்தோஷ்குமாரின் உறவினர் ஆனந்தன் காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கத்தியால் குத்திய கோவிந்தராஜை கைது செய்து காஞ்சிபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Related Tags :
Next Story