மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் சித்த மருத்துவ சிகிச்சை பிரிவுக்கு உபகரணங்கள் எம்.எல்.ஏ. வழங்கினார் + "||" + Equipment for Kanchipuram Paranormal Medical Unit MLA Presented

காஞ்சீபுரம் சித்த மருத்துவ சிகிச்சை பிரிவுக்கு உபகரணங்கள் எம்.எல்.ஏ. வழங்கினார்

காஞ்சீபுரம் சித்த மருத்துவ சிகிச்சை பிரிவுக்கு உபகரணங்கள் எம்.எல்.ஏ. வழங்கினார்
காஞ்சீபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் அமைந்துள்ள மீனாட்சி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது.
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் அமைந்துள்ள மீனாட்சி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 187 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றனர். அவர்களில் 101 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 86 பேர் சித்த மருத்துவ சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்த மையத்தில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு ஆவி பிடிக்கும் உபகரணங்கள் இல்லை என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து காஞ்சீரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன் 50 ஆவி பிடிக்கும் உபகரணங்களை சித்த மருத்துவ சிகிச்சை பிரிவுக்கு வழங்கினார். காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அய்யாச்சாமி, சித்த மருத்துவர்கள் முத்துக்குமார், பார்வதி ஆகியோர் ஆவி பிடிக்கும் உபகரணங்களை பெற்று கொண்டனர்.

இதில் அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் கல்பனா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 2 ஹெலிகாப்டர்களில் சென்னை வந்த 1 டன் மருத்துவ உபகரணங்கள்
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
2. “தந்தைக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை” - டாக்டர் மீது தாக்குதல் நடத்திய மகன்
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட தந்தை இறந்ததால், கொரோனா வார்டுக்குள் புகுந்து பெண் டாக்டர் மீது அவரது மகன் தாக்குதல் நடத்தினார்.
3. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,982 பேர் பாதிப்பு; 29 பேர் சாவு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,982 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 677-ஆக உயர்ந்துள்ளது.
4. மருந்து கடையில் பொதுமக்களுக்கு ஊசி போட்டு சிகிச்சை அளித்த கணவன்-மனைவி கைது
மருந்து கடையில் பொதுமக்களுக்கு ஊசி போட்டு சிகிச்சை அளித்த கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.
5. கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு மருந்து ஒதுக்கீடு
கருப்பு பூஞ்சை நோய்க்கான ஆம்போடெரிசின்-பி மருந்து கூடுதலாக 23,680 குப்பிகள் மாநிலங்களுக்கு, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.