மாமல்லபுரம் அருகே குடிநீர் குழாயில் கழிவுநீ்ர் கலந்து வருவதால் பொதுமக்கள் அவதி நடவடிக்கை எடுக்க கோரிக்கை


மாமல்லபுரம் அருகே குடிநீர் குழாயில் கழிவுநீ்ர் கலந்து வருவதால் பொதுமக்கள் அவதி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 31 May 2021 4:47 AM GMT (Updated: 31 May 2021 4:47 AM GMT)

மாமல்லபுரம் அருகே குடிநீர் குழாயில் கழிவுநீ்ர் கலந்து வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த மணமை கிராமத்தில் திருவள்ளுவர் தெருவில் ஊராட்சி பொது குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் இருந்து வினியோகிக்கப்படும் குடிநீரை தான் தெரு குழாய்களில் கிராம மக்கள் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர்.

திறந்த வெளி கிணறாக உள்ள இந்த குடிநீர் கிணறு இதுநாள் வரை மூடப்படாமல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இதனால் இந்த கிணற்றில் காகம், குருவிகள், பாம்புகள் அடிக்கடி விழுந்து இறந்து கிடக்கின்றன. அதேபோல் மரங்களில் இருந்து இலைகள் விழுந்து கழிவுநீர் போன்று காட்சி அளிக்கிறது.

பொதுமக்கள் கோரிக்கை

குடிநீர் குழாய்கள் மூலம் வினியோகிக்கும் இந்த தண்ணீரை குடிக்கும் பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். ஆகவே இந்த கிணற்று நீரை வெளியேற்றி சுத்தம் செய்து, குருவி, பூச்சிகள் உள்ளே விழாதவாறு கிணற்றின் மீது பாதுகாப்பு மூடி அமைத்து பாதுகாக்க வேண்டும். குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கதவுகள் உடைந்து பழுதடைந்த மோட்டார் அறையை சீரமைக்க மணமை ஊராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story